×

மகா சிவராத்திரியையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் மாலை கட்டும் பூக்கள் விலை கடும் உயர்வு

திண்டுக்கல், மார்ச் 8: திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. குறிப்பாக மாலை கட்டுவதற்கான பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்பனையான சம்பங்கி ரூ250க்கும், ரூ.20க்கு விற்பனையான அரளி பூ கிலோ ரூ.250க்கும், ரூ.40க்கு விற்பனையான ரோஜா பூ ரூ.130க்கும், ரூ.100க்கு விற்பனையான செவ்வந்தி பூ ரூ.250க்கும், ரூ.30க்கு விற்பனையான விருச்சி பூ ரூ.100க்கும், ரூ.80க்கு விற்பனையான காகரட்டான் ரூ.800க்கும், விற்பனையானது.

இதேபோல் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800க்கும், கனகாம்பரம் 350க்கும், முல்லை பூ ரூ.450க்கும், ஜாதி பூ ரூ.600க்கும், வில்வ இலை ரூ.250க்கும், பட்டன்ரோஸ் ரூ.170 முதல் ரூ.250 வரையிலும், கோழிகொண்டை ரூ.50க்கும்., செண்டுமல்லி ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.50க்கும், மரிக்கொழுந்து ரூ.80க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.20க்கும், விற்பனையாகிறது.

 

The post மகா சிவராத்திரியையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் மாலை கட்டும் பூக்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Dindigul market ,Dindigul ,Anna Flower Market ,Erode ,Trichy ,Salem ,Chennai ,Kerala ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...